Saturday 21st of December 2024 11:08:32 PM GMT

LANGUAGE - TAMIL
-
மணமகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மணமகன்!

மணமகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மணமகன்!


திருமணம் முடிந்தவுடன் மணமகன் மணமகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெரும்பாலும் திருமணம் முடிந்தவுடன் மணப்பெண், மணமகனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். இது தனது வாழ்க்கை இனி கணவனுடன் தான் இருக்கப்போகிறது என்பதால் அவரது ஆசிர்வாதம் தேவை என இந்த கலாச்சாரம் இருக்கிறது.

பொதுவாக இந்து மத திருமணங்களில் இந்த கலாச்சரம் அதிகமாக கடை பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் இதற்கு நேர் மாறாக மணமகன் , மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். அதில் அவர் மணமகன் ஏன் மணமகளின் காலில் விழுந்தார் என்பதற்கான 9 காரணங்களை குறிப்பி்ட்டிருக்கிறார்.

என் சந்ததியை தொடரப்போகிறவள், என் வீட்டிற்கு லட்சுமியை கொண்டு வரப்போகிறவள், என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கப்போகிறவள், என்னை தந்தையாக்கி மகிழ்விக்கப்போகிறவள், பிரசவத்தின் போது என் குழந்தைக்காக மரணத்தை தொட்டு திரும்ப போகிறவள், என் வீட்டிற்கு அஸ்திவாராமாக போகிறவள், அவள் நடத்தையால் சமூகத்தில் எனக்கான அங்கீகாரத்தை தரப்போகிறவள், என் பெற்றோருக்கு பிறகு என்னுடன் பயணிக்கப்போகிறவள், எனக்காக அவளது பெற்றோரை பிரிந்து வரப்போகிறவள். இவை எல்லாம் செய்யும் அவளுக்கு, நான் இந்த மரியாதையை கூட செய்யமாட்டேனா? இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. காலில் விழுவதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல என குறிப்பிட்டுள்ளார்.


Category: பெண்கள் & குழந்தைகள், புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE